Monday, July 27, 2009

கனவுக் கண்டேன்

1)
மனைவி : நீங்க எனக்கு அழகான பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்கற மாதிரி கனவுக் கண்டேன்.

கணவன் : அப்படியா! அடுத்த தடவை அதை க‌ட்டி‌ப் பார்க்குறமாதிரி கனவு கண்டு சந்தோஷ‌ப்ப‌ட்டு‌க்கோ. எ‌ன்ன ஆள ‌விடு

2)
என்னப்பா இது வித்யாசமா இருக்கே! கல்யாண மோதிரத்தை மாப்பிள்ளை காலில் தான் போடணும்னு சொல்றாங்க.
சரி நீ என்ன சொன்ன?
நான் சரின்னு சொல்லி கால் விரல் அளவு கேட்டேன்?
கொடுத்தாங்களா
அதப்பாத்துதான்பா பயந்து போயிட்டேன், மாப்பிள்ளைக்கு யானைக்கால்


3)
ஆசிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?

மாணவன் : ந‌ம்மல தூ‌க்‌கி‌ப் போ‌ட்டவ‌ன் தலைமேல ‌விழலா‌ம்னுதா‌ன்.

ஆசிரியர் : ??????????

4)
ராமு : ஒருத்தன் ஒரு மாட்டுக்கு பத்து மணிக்கு புல்லுக்கட்டு போடறான். பதினோரு மணிக்கு அடுத்த மாட்டுக்கு புல்லுக்கட்டு போடறான். எந்த மாடு முன்னாடி சாணி போடும்?
சோமு : பத்து மணிக்குப் புல்லுக்கட்டுப் போட்ட மாடு தான் முன்னாடி சாணி போடும்.
ராமு : இல்லை! எல்லா மாடும் பின்னாடி தான் சாணி போடும்.

5)
ஏங்க ந‌ம்ம வேலைக்காரி ஒரு புடவை கட்டியிருக்கா பாருங்க பிரமாத இரு‌க்கு. அது மாதிரி எனக்கு ஒண்ணு வாங்‌கி த‌ர்‌றீ‌ங்களா?

ரொ‌ம்ப க‌ஷ‌்டமா‌ச்சே.. அ‌ந்த மா‌தி‌ரி புடவை அ‌ந்த கடை‌யிலேயே ஒ‌‌ண்ணுதா‌ன் இரு‌ந்தது.