Wednesday, March 25, 2009

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

வடிவேலுவின் திரைப்படத்தில் வரும் “வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்” என்பதே இதன் விரிவு. யாருடைய மனமும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்திக்கொண்டு  மற்றவர்களை சிரிக்க செய்யும் வடிவேலுவின் பாணியே இவர்களின் பாணியும்.

 

யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவை இழையோட வரும் பதிவுகள், மாதம் ஒரு பதிவரை அட்லஸ் வாலிபராக்கி அவருடைய நகைச்சுவை ரசனையை அனைவருக்கும் வெளிப்படுத்துவது என்பவை சிறப்பு.

 

வ.வா.சங்கக் கூட்டுப்பதிவு நகைச்சுவைக்கெனவே ஆரம்பிக்கப்பட்டது.வெற்றிக்கரமான இரண்டாம் ஆண்டுவிழாவினைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு போட்டி , ப்ரம்ம ரசம் போட்டி போன்று அவ்வப்போது நடக்கும் போட்டிகளெல்லாம்  வாசகர்களின் நகைச்சுவை ரசனையை ஊக்கப்படுத்துகிறது.

 

 

 

 

வ.வா.சங்கத்தில்  இருக்கும் சிங்கங்களில் கைப்புள்ளையையோ இல்ல அங்கே அப்பரண்டிசா இருக்கறவங்களையோ அவர்களே கலாய்த்துப் (கிண்டலடித்து) போடப்படும் பதிவுகள் நிஜ கைப்புள்ளை வடிவேலுவையே கவர்ந்த விசயங்களாகும்.உங்களுக்காக இரண்டு உதாரணச்சிரிப்பு வெடிகள்.

 

 

1.அண்ணே, அண்ணே உங்களுக்கு மூத்திர சந்தில் இருந்து போன் வந்திருக்கு

கைப்புள்ள : கட்டதுரை கட்ட்ட்ட்ட்ட்ட துரை பார்த்தியா என் ரேஞ்ச…நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லை, அங்கங்கே அப்பாய்ன்மெண்ட் கொடுத்து…அடிவாங்க போன் போட்டு கூப்பிட்டு கொடுக்கிறானுங்க, நான் அவ்வளவு பிசி…. உன்னிய மதிச்சி 2 அரைவாங்கினது நான் உனக்கு கொடுத்த மரியாதை…காப்பாத்திக்க…

 

2.ஆமாங்க கடைசி ஓவர்ல்ல ஆறு பாலுக்கு முப்பது ரன் இருந்துச்சு… அப்போ எங்க கோச் வந்து காட்டுக் கத்தலா அடிச்சு ஆடுறா கொய்யா…. அடிச்சு ஆடுறா கொய்யா…..அப்படின்னு உசுப்பு ஏத்துனார்”

“சுத்திப் பாத்தேன்… நான் அடிக்கிற அளவுக்கு யாரும் பக்கத்துல்ல இல்ல… எதிரி டீம்ல்ல எல்லாருமே வாட்டச் சாட்டமா இருந்தாங்க.. யோசிச்சேன்… யார் அடிச்சாலும் சும்மா அசால்ட்டா தாங்குற ஒரே மனதைரியம் கொண்ட ஒப்பற்ற மனுசன்.. எங்கத் தல தான் அதான் வேகமா ஓடிப் போய் பெவிலியன்ல்ல குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்த எங்கத் தல கன்னத்துல்ல பளேர்ன்னு ஒரு அரை விட்டுட்டு வந்து ஆடுனேன்… நாங்க செயிச்சுட்டோம்.. ஆனா எங்கத் தல கண்ணீர் விட்டு அழுததை டிவியிலே திரும்ப திரும்ப பாக்கும் போது தான் மனச் சங்கடமாப் போயிச்சுங்க”.சங்கத்தச் சிங்கங்களைச் சந்திக்கலாம் வாங்க.

No comments:

Post a Comment